ரிஷிவந்தியத்தில் பெண்களை தாக்கிய தம்பதி மீது வழக்கு


ரிஷிவந்தியத்தில்   பெண்களை தாக்கிய தம்பதி மீது வழக்கு
x

ரிஷிவந்தியத்தில் பெண்ணை தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி அலமேலு (வயது 40). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த கோவிந்தன் என்பவருடைய குழந்தைகள் அடுப்பு அருகே விளையாடியதாக கூறப்படுகிறது. இதைபார்த்த அலமேலு அந்த குழந்தைகளை தள்ளி சென்று விளையாடுமாறு கூறியுள்ளார். இதைகேட்டு ஆத்திரமடைந்த கோவிந்தன் மற்றும் அவருடைய மனைவி உமா ஆகியோர் அலமேலுவை திட்டி தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். இதை தடுக்க முயன்ற அலமேலு உறவினர் முனியம்மாளையும் கோவிந்தன், உமா ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கோவிந்தன், உமா ஆகியோர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story