கந்து வட்டி கேட்டு மிரட்டல் தந்தை - மகன் மீது வழக்கு


கந்து வட்டி கேட்டு மிரட்டல் தந்தை - மகன் மீது வழக்கு
x

மாங்காய் வியாபாரியிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய தந்தை- மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி:-

குருபரப்பள்ளி அருகே மகராஜகடையை அடுத்த போதிநாயனப்பள்ளியை சேர்ந்த மாங்காய் வியாபாரி யாரப் பாஷா (வயது 43). பெரிய கோட்டப்பள்ளியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (45), இவருடைய மகன் சசிகுமார் (22). நிதி நிறுவனம் நடத்தி வரும் இவர்கள் 2 பேரிடமும், யாரப் பாஷா, தனது 20 சென்ட் நிலத்தை அடகு வைத்து ரூ.50 ஆயிரம் கடன் பெற்றார். இதற்கு மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் செலுத்தி உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக யாரப் பாஷாவால் பணம் கட்ட முடியவில்லை. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி திருநாவுக்கரசு, அவருடைய மகன் சசிகுமார் ஆகியோர் யாரப் பாஷா வீட்டுக்குச் சென்று ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை உடனே தருமாறு கேட்டு மிரட்டி உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் மகராஜகடை போலீசார் தந்தை- மகன் இருவர் மீதும் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கல்லாவியை சேர்ந்த வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் சந்தோஷ்குமார் (42) என்பவர், மாதேஸ்வரன் என்பவரிடம் ரூ.4 லட்சம் கடன் வாங்கி இருந்தார். அதற்கு ரூ.3 லட்சத்து 23 ஆயிரம் வட்டி கொடுத்துள்ளார். கடந்த ஒரு ஆண்டாக வட்டி கொடுக்கவில்லை. இதற்கிடையே ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் தர வேண்டும் என்று மாதேஸ்வரன், சந்தோஷ்குமாரிடம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கல்லாவி போலீசார் மாதேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story