முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மீது வழக்கு


முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மீது வழக்கு
x

முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சார்பதிவாளராக பணியாற்றி வருபவர் முத்துச்சாமி (வயது 55). அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாக சார் பதிவாளர் முத்துசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசில் புகார் அளித்தாா். அதேபோல் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டதாக சார் பதிவாளர் மீது இன்பத்தமிழன் புகார் அளித்தார். இருபுகார்களின் பேரிலும் விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் சார் பதிவாளர் கொடுத்த புகாரின் பேரில் பணம் கேட்டு மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Related Tags :
Next Story