இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு


இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு
x

போலீஸ்காரருக்கு மிரட்டல் விடுத்த இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

வடமரை போலீஸ் நிலையத்தில், போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் விவேக் (வயது 35). நேற்று முன்தினம் இரவு இவர், அய்யலூர் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அங்கு இந்து முன்னணியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளரான சதீஸ் என்ற ராஜசங்கர் (38) என்பவர் அனுமதியின்றி இந்து முன்னணி கொடி கம்பத்தை நட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த போலீஸ்காரர் விவேக், கொடி கம்பத்தை அப்புறப்படுத்துமாறு கூறினார். இதனால் அவரை, சதீஸ் மிரட்டியதுடன் பணி செய்யவிடாமல் தடுத்தார். இதுகுறித்து விவேக், வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சதீஸ் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story