கிராம நில அளவையருக்கு மிரட்டல் விடுத்த தொழிலாளி மீது வழக்கு


கிராம நில அளவையருக்கு மிரட்டல் விடுத்த தொழிலாளி மீது வழக்கு
x

கிராம நில அளவையருக்கு மிரட்டல் விடுத்த தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்

தோைகமலை அருகே உள்ள அ.உடையபட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 40). இவர் சொந்தமாக செருப்பு கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மாகாளிப்பட்டி என்ற ஊரில் 2.80 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளார். அதில் 18 சென்ட் நிலம் குறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் நிலத்தை அளந்து தனிப்பட்டா வழங்கக்கோரி முத்துச்சாமி, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு அளித்தார். ஆனால் இதுவரை நிலத்தை யாரும் வந்து அளந்து தரவில்லை என கூறப்படுகிறது. பின்னர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நில அளவையர் சிவராதா (49) என்பவரை பார்ப்பதற்காக முத்துச்சாமி வந்துள்ளார். அப்போது முத்துச்சாமி என்னுடைய நிலத்தை அளந்து தனிப்பட்ட பட்டா மாறுதல் தர வேண்டும் என கூறி, சிவராதாவை தகாத வார்த்தையால் திட்டி தாக்க முயன்றுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் முத்துச்சாமி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story