சாராயம் விற்றவர் மீது வழக்கு


சாராயம் விற்றவர் மீது வழக்கு
x

சாராயம் விற்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சேலம்

ஏற்காடு:

ஏற்காடு அருகே உள்ள மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ெபலாக்காடு பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக ஏற்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குமார் (வயது 48) என்பவரது வீட்டில் சாராயம் பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story