கோவில் திருவிழாவில் பெண்ணிற்கு அரிவாள் வெட்டியவர் மீது வழக்கு
கோவில் திருவிழாவில் பெண்ணிற்கு அரிவாள் வெட்டியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர்
தோகைமலை அருகே உள்ள உப்பிலியப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி தாமரை (வயது 35). இவர் தனது உறவுக்கார பெண்ணுடன் நேற்று முன்தினம் உப்பிலியப்பட்டியில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் பொது இடத்தில் வைத்து ஊர் மக்களை தகராறில் திட்டி கொண்டிருந்தார். இதனை ஊர் பெரியவர்கள் யாரும் தட்டி கேட்க மாட்டீர்களா என்று தாமரை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த் அரிவாளால் தாமரையின் கழுத்து மற்றும் தோள்பட்டையில் வெட்டி, கொைல மிரட்டல் விடுத்தார். இதில் படுகாயம் அடைந்த தாமரை மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தாமரை கொடுத்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் ஆனந்த் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story