பசு மாட்டின் காலை வெட்டியவர் மீது வழக்கு
சங்கராபுரம் அருகே பசு மாட்டின் காலை வெட்டியவர் மீது வழக்கு
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாமிகண்ணு மனைவி நிரோஷா(வயது 33). இவரும், இவரது கணவரும் 2 கறவை மாடுகள் வைத்து, கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே ஊரை சோ்ந்த பிச்சன் மகன் சாமிகண்ணு என்பவரின் விவசாய நிலம் அருகில் சோளம் பயிர் செய்து அறுவடை செய்துள்ள இடத்தில் நிரோஷாவின் பசுமாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. இதைப்பார்த்து ஆத்திரமடைந்த சாமிகண்ணு தன்னிடம் இருந்த கொடுவாளால் மாடுகளின் வால் மற்றும் கால் பகுதியில் சரமாரியாக வெட்டினார். இதனால் ரத்தம் சொட்ட செட்ட வலி தாங்க முடியாமல் அவைகள் அலறின.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நிரோஷா சாமிகண்ணுவிடம் தட்டிக் கேட்டபோது அவர் ஆபாசமாக திட்டி கொடுவாளை காட்டி மிரட்டியதாக தெரிகிறது. பின்னர் இது குறித்து நிரோஷா கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.