மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்தியவர் மீது வழக்கு


மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்தியவர் மீது வழக்கு
x

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்தியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோடு கிருபா நகரை சேர்ந்தவர் இசக்கி. இவரின் மகன் லட்சுமணமுருகன் (வயது 47). இவர் சம்பவத்தன்று பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அப்போது திடீரென அவர் அங்கு இருந்த டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டு அங்கு இருந்த மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்தினாராம். இதுகுறித்து ஆஸ்பத்திரி டீன் ரவிசந்திரன் கொடுத்த புகாரின் பேரில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசார் லட்சுமணமுருகன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே லட்சுமணமுருகன் வேறொரு குற்ற சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசாரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.


Next Story