பத்தமடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு


பத்தமடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
x

பத்தமடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி

முக்கூடல்:

பத்தமடை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் ராமமூர்த்தி. இவர், பெண் ஒருவரின் பத்திரம் தொலைந்து போனதாகவும், அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், முக்கூடல் போலீஸ் இன்ஸ்பெக்டரின் முத்திரையுடன் கையெழுத்திட்டு சான்றிதழ் வழங்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த சான்றிதழ் மூலம் அந்த பெண்ணின் மகன் பெயரில் முக்கூடல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு நடைபெற்றது. இதுகுறித்து முக்கூடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின்ேபரில், ராமமூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story