மணல் கடத்தியவர் மீது வழக்கு


மணல் கடத்தியவர் மீது வழக்கு
x

மணல் கடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் திருமாநிலையூர் அருகே உள்ள அமராவதி ஆற்றுப்பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில், பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அமராவதி ஆற்றில் மணல் கடத்தி கொண்டிருந்த ஒருவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மாட்டுவண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்டதாக அதே பகுதியை சேர்ந்த ராமராஜ் (வயது48) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story