மொபட்டில் மணல் கடத்தியவர் மீது வழக்கு
மொபட்டில் மணல் கடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் தனது உதவியாளருடன் பஞ்சாயத்து அலுவலகம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது மொபட்டில் வந்த ஒருவர் 3 மணல் மூட்டைகளை கொள்ளிடம் ஆற்றில் இருந்து ஏற்றிச்சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை தடுத்து நிறுத்தி விசாரிக்க முயற்சி செய்தபோது அவர் தப்பி ஓடிவிட்டார்.இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் தா.பழூர் சப்- இன்ஸ்பெக்டர் சரத்குமார் மணல் கடத்தியதாக குறிச்சி கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தார். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story