இலங்கை போலீஸ்காரர் மீதான வழக்கு அடுத்த மாதம் ஒத்திவைப்பு


இலங்கை போலீஸ்காரர் மீதான வழக்கு அடுத்த மாதம் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர் ஆகாததால் இலங்கை போலீஸ்காரர் மீதான வழக்கு அடுத்த மாதம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்

இலங்கையில் 23 கிலோ ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட இலங்கை ேபாலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாரா. இவர் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக பைபர் படகு ஒன்றில் தமிழகம் தப்பி வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதி மண்டபம் கடலோர போலீசார் அவரை கைது செய்து சென்னை பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. பிரதீப் குமார் பண்டாராவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டு திருச்சி முகாமிற்கு மாற்றப்பட்டார். அவர் மீதான வழக்கில் ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் வழக்கு விசாரணை நடந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக உடல்நிலை குறைவால் அவர் நேற்று ஆஜராகாததால் ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண்.2 நீதிபதி விசாரணையை ஜனவரி 10-ந் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story