பள்ளி மாணவியை தாயாக்கியமாணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு
பள்ளி மாணவியை தாயாக்கிய மாணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விழுப்புரம்
கண்டாச்சிபுரம் தாலுகாவிற்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் அதே பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாம்பழப்பட்டு பழைய காலனியை சேர்ந்த 17 வயதுடைய மாணவர் ஒருவர் ஆசைவார்த்தை கூறி தவறாக நடந்துகொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் அம்மாணவி வயிறு வலிப்பதாக கூறியதால் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அம்மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதைப்பார்த்ததும் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மாணவியின் தாய், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அம்மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story