போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு


போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

திருநெல்வேலி

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அசன். இவருடைய மகன் சதாம்உசேன் (வயது 25). இவர் நெல்லையை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா, போக்சோ சட்டத்தின் கீழ் சதாம்உசேன் மீது வழக்குப்பதிவு செய்து தேடிவருகிறார்.


Next Story