ஆடிட்டர் அலுவலகம் நடத்தியவர் மீது வழக்கு


ஆடிட்டர் அலுவலகம் நடத்தியவர் மீது வழக்கு
x

பட்டய கணக்காயர்கள் நிறுவனத்தில் பதிவு செய்யாமல் ஆடிட்டர் அலுவலகம் நடத்தியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல்

சென்னையில் உள்ள இந்திய பட்டய கணக்காயர்கள் நிறுவனத்தின் செயலா் பாலாஜி, திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில், இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தில் பதிவு செய்யாமல், திண்டுக்கல்லில் நாகராஜ் என்பவர் ஆடிட்டர் அலுவலகம் நடத்தி வருகிறார். மேலும் அவர் ஆடிட்டர் எனக்கூறி பலருக்கு வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்து வருகிறார்.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார். இதையடுத்து நாகராஜ் மீது திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் வெளியூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.


Next Story