அரசு பஸ்சை இயக்கி பொது சொத்துகளை சேதப்படுத்திய டிரைவர் மீது வழக்கு


அரசு பஸ்சை இயக்கி பொது சொத்துகளை சேதப்படுத்திய டிரைவர் மீது வழக்கு
x

கரூரில் அரசு பஸ்சை இயக்கி பொது சொத்துகளை சேதப்படுத்திய டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர்

தடுப்பு சுவரில் மோதிய அரசு பஸ்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 40). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று திருச்சியில் இருந்து கரூருக்கு ஒரு அரசு பஸ்சை மதியழகன் ஓட்டிவந்தார். அந்த பஸ் திருச்சி-கரூர் ெநடுஞ்சாலையில் காந்திகிராமம் பகுதியில் சென்று கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் மைய தடுப்பு சுவர் மீது அரசு மோதியது. இதில் தடுப்பு சுவர்இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த சில பயணிகளுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பொது சொத்துகள் சேதம்

மேலும், அந்த பஸ் மோதியதில் தடுப்பு சுவர்கள், எல்.இ.டி. பல்புகள், கேபிள் ஓயர்கள், பவுண்டேஷன் போல்ட்டுகள் உள்ளிட்ட ரூ.60 ஆயிரம் மதிப்பிலான அரசு பொது சொத்துகள் சேதமாகி உள்ளது. இதுகுறித்து கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன், அரசு சொத்துகளை சேதப்படுத்தியதாக பஸ் டிரைவர் மதியழகன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story