நிலத்தகராறில் விவசாயியை தாக்கியவர் மீது வழக்கு


நிலத்தகராறில் விவசாயியை தாக்கியவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 29 March 2023 1:00 AM IST (Updated: 29 March 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

மேட்டூர்:-

மேட்டூர் அருகே உள்ள கூழையூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணையன் (வயது 62). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான ஈஸ்வரன் (50) என்பவருக்கும் இடையே நிலபிரச்சினை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி இரவு வீட்டில் படுத்து இருந்த கண்ணையனை ஈஸ்வரன் இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த கண்ணையன் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் கருமலைக்கூடல் போலீசார் ஈஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story