விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மீது வழக்கு


விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மீது வழக்கு
x

விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி கருமண்டபம் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு மசாஜ் மையத்தில் (ஸ்பா) நேற்று முன்தினம் விபசார தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். இதில் அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மசாஜ் மைய மேலாளர் கர்நாடகாவை சேர்ந்த லெட்சுமிதேவியை கைது செய்தனர். மேலும், அங்கிருந்து 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மசாஜ் மையத்தை சோமரசம்பேட்டையை சேர்ந்த செந்தில் நடத்தி வந்ததும், அவர் விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story