மனைவியை தாக்கியவர் மீது வழக்கு
மனைவியை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருநெல்வேலி
தச்சநல்லூர்:
நெல்லை அருகே தச்சநல்லூர் சத்திரம் புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் தனியார் கார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், ரமணி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் வீடு வாங்க ரமணியிடம் கணவர் பாலமுருகன் பணம் கேட்டாராம். இதில் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பாலமுருகன், தனது மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து ரமணி தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story