மனைவியை தாக்கியவர் மீது வழக்கு


மனைவியை தாக்கியவர் மீது வழக்கு
x

மனைவியை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விருதுநகர்


விருதுநகர் காந்தி நகரை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 32). இவருடைய மனைவி ராஜேஸ்வரி (29). தனசேகரன், ராஜேஸ்வரியிடம் அவரது பெற்றோரிடமிருந்து பணம் வாங்கி தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராஜேஸ்வரி தனது பெற்றோரிடம் பணம் இல்லை என்று தெரிவித்ததால் ஆத்திரமடைந்த தனசேகரன், ராஜேஸ்வரியை தாக்கி படுகாயப்படுத்தியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ராஜேஸ்வரி சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் தனசேகரன் மீது பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story