பூச்செடிகளை சேதப்படுத்திய பெண் மீது வழக்கு
சங்கராபுரம் அருகே பூச்செடிகளை சேதப்படுத்திய பெண் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் மனைவி வெண்ணிலா(வயது 30). இவரது வளர்ப்பு நாய் அதே ஊரை சேர்ந்த பெரியசாமி மனைவி ராணி என்பவரை பார்த்து குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் நாய் மீது கல்லை வீசியபோது அது இரும்பு கதவின் மீது பட்டதாக தெரிகிறது. இதை வெண்ணிலா தட்டிக் கேட்டபோது ஆத்திரம் அடைந்த ராணி அங்கிருந்த பூச்செடிகளை சேதப்படுத்தி, வெண்ணிலாவை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து வெண்ணிலா கொடுத்த புகாரின் பேரில் ராணி மீது சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story