அதிக உயரம் கொண்ட விநாயகர் சிலை வைத்த 10 பேர் மீது வழக்கு
கடையநல்லூரில் அதிக உயரம் கொண்ட விநாயகர் சிலை வைத்த 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தென்காசி
கடையநல்லூர்:
விநாயகர் சதுர்த்தியையொட்டி கடையநல்லூர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த சிலைகள் நேற்று முன்தினம் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. அதில் சுமார் 5 விநாயகர் சிலைகள் அரசு அனுமதித்த அளவை விட அதிக உயரம் கொண்டதாகவும், களிமண்ணுக்கு பதிலாக சுற்றுச்சூழலை பாதிக்கும் பொருளால் தயாரிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த சிலைகளின் குழு பொறுப்பாளர்கள் தலா 2 பேர் வீதம் 10 பேர் மீது கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story