சென்னையில் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 163 பேர் மீது வழக்கு


சென்னையில் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 163 பேர் மீது வழக்கு
x

பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

சென்னை,

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது. தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. காலையில் 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னையில் நேரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.அறிவிப்பை மீறி பட்டாசுகளை வெடித்ததாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story