பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு


பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
x

தா.பழூர் அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பொற்பொதிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மனைவி இன்பஜோதி (வயது 38). இவர் சம்பவத்தன்று தனது வயக்காட்டில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அருகிலுள்ள சுப்பையா என்பவர் வயலில் அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் மனைவி சித்ரா என்பவரை பொற்பதிந்தநல்லூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த துரையப்பன் (63), அவருடைய மகன் முருகன் (38) ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட இன்பஜோதியையும் அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இன்பஜோதியை அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் குறித்து இன்பஜோதி அளித்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், பெண்ணை தாக்கிய துரையப்பன், அவருடைய மகன் முருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story