மாமியார் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிப்புமருமகன் உள்பட 3 பேர் மீது வழக்கு
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மாமியார் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடி தீ வைத்து கொளுத்தி நகைகளை மருமகன் திருடிச்சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மாமியார் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடி தீ வைத்து கொளுத்தி நகைகளை மருமகன் திருடிச்சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருமணம்
திருவண்ணாமலை பே கோபுர தெருவை சேர்ந்தவர் ராஜகிரி. இவரது மனைவி மஞ்சுளாதேவி (வயது 52). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான வினோதினிக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த சுப்பிரமணியின் மகன் சுரேஷ் என்பவருக்கும் இடையே கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
சுரேசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தினால் வினோதினி கணவரை பிரிந்து அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சுரேஷ் கடந்த 28-ந் தேதி மஞ்சுளாதேவியின் வீட்டிற்கு சென்று வினோதினியையும், அவரது தாயையும் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வினினோதியும், அவரது தாயையும் வீட்டை பூட்டி விட்டு அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர்.
தீவைத்து ெகாளுத்தினர்
பின்னர் சுரேஷ் மற்றும் அவரது உறவினர்கள் மஞ்சுளாதேவியின் வீட்டிற்கு சென்று கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி சேதப்படுத்தியதாக வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மஞ்சுளாதேவி கொடுத்த புகாரின் பேரில் அவரது மருமகன் சுரேஷ் மற்றும் உறவினர்கள் என 3 பேர் மீது திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.