பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு
பூதலூர் அருகே பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
தஞ்சாவூர்
பூதலூர் அருகே உள்ள கோட்டரப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஜெனிட்டா (வயது 41). இவரை முன்விரோதம் காரணமாக அதே ஊரைச் சேர்ந்த விண்ணரசி, தாமஸ், ஜெலஸ்டின், இருதயராஜ் ஆகியோர் திட்டி குச்சியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஜெனிட்டா தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பூதலூர் போலீசில் ஜெனிட்டா புகார் செய்தார். அதன்பேரில் விண்ணரசி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல விண்ணரசி, தன்னை ஜெனிட்டா அடித்ததாக புகார் செய்தார். அந்த புகார் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story