பெண்ணை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
பெண்ணை தாக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
காட்டுப்புத்தூர்:
காட்டுப்புத்தூர் அருகே முருங்கை ஊராட்சி மருதம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியனின் மனைவி ஜெயலட்சுமி(வயது 45). இவர் தனது கணவரின் தம்பி மகன்களுக்கு தனது நிலத்தை ரூ.45 லட்சத்திற்கு பத்திரப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் பணத்தை வங்கியில் செலுத்தி விடுவதாக நிலத்தை வாங்கியவர்கள் கூறியுள்ளனர். ஆனால் பல மாதங்கள் ஆகியும் பணத்தை வங்கியில் செலுத்தவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் நிலத்தை வாங்கிய அரவிந்த், செல்வி, மாரப்பன், நடராஜன், செல்லம்மாள் ஆகியோர் நிலத்தை பார்வையிடுவதற்காக வந்துள்ளனர். இதையறிந்த ஜெயலட்சுமி இத்தனை மாதங்கள் ஆகியும் ஏன் இன்னும் பணத்தை கொடுக்கவில்லை என்று கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த 5 பேரும் ஜெயலட்சுமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக ஜெயலட்சுமி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்படி காட்டுப்புத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.