வரதட்சணை கேட்டு பெண்ணை தொந்தரவு செய்த கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு
வரதட்சணை கேட்டு பெண்ணை தொந்தரவு செய்த கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு செய்யப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டை அரசமரத் தெருவை சேர்ந்தவர் லோகேஸ்வரி (வயது 26). பி.இ. பட்டதாரியான இவருக்கும், ஈரோடு மாவட்டம் அய்யனாரப்பன் கோவில் வீதியை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான சீனிவாசன் என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு லோகேஸ்வரி கணவரின் குடும்பத்துடன் கூட்டு குடும்பமாக ஈரோட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் லோகேஸ்வரி மலைக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கணவர் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு மனதளவிலும், உடல் அளவிலும் கொடுமை செய்து வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். அதன் பேரில் போலீசார் கணவர் சீனிவாசன், மாமனார் நடராஜன், மாமியார் மல்லிகா என்கிற தனலட்சுமி, நாத்தனார்கள் காயத்திரி, திவ்யா மற்றும் சபரிநாதன், அலமேலு ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.