மருத்துவ மாணவியை கர்ப்பமாக்கிய தர்மபுரி டாக்டர் மீது வழக்கு
சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரியா ஸ்டெபி (வயது 23). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் சித்தா மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். ரியா ஸ்டெபி அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-
தர்மபுரியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஆர்த்தோ டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் எனக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். எங்களது காதலை அவரது வீட்டில் ஏற்றுக் கொண்டனர். இதனால் தமிழ்ச்செல்வன் குடும்பத்தினருடன் பழகி வந்தேன். மேலும் தமிழ்செல்வனுடன் நெருங்கி பழகியதால் நான் கர்ப்பம் ஆனேன். அவர் கட்டாயத்தின் பேரில் நான் கருவை கலைத்தேன். இந்த நிலையில் தமிழ்செல்வன் என்னை திருமணம் செய்ய மறுத்து வருகிறார். எனவே காதலித்து ஏமாற்றிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அதன்பேரில் தமிழ்செல்வன் மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.