வியாபாரியை தாக்கிய தந்தை- மகன் மீது வழக்கு


வியாபாரியை தாக்கிய தந்தை- மகன் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 May 2023 12:15 AM IST (Updated: 28 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினத்தில் வியாபாரியை தாக்கிய தந்தை- மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் அருகே உள்ள கல்லாமொழி வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் லட்சுமண பெருமாள் மகன் இசக்கிமுத்து (வயது 35). கடல் சிப்பி வியாபாரியான இவர் தூத்துக்குடி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற சிப்பி வியாபாரியிடம் கடந்த 5 ஆண்டுகளாக சேகரிப்பதை விற்று வந்துள்ளார். இதையடுத்து சக்திவேலிடம், இசக்கிமுத்து ரூ.11 லட்சம் முன்பணமாக பெற்று பெற்றுக் கொண்டு சிப்பி கொடுக்கும் போது சிப்பிக்கு உண்டான தொகையினை வாங்கிய முன் பணத்திலிருந்து கழித்துக் கொள்வதாக கூறியுள்ளார். ஆனால் சக்திவேலுக்கு, இசக்கிமுத்து சிப்பி கொடுத்தபோது அதற்கான தொகையை கழிக்காமல் முன் தொகையாக பெற்ற ரூ.11 லட்சத்திற்கும் ஆவணம் தயார் செய்து கையெழுத்து பெற்றுள்ளார். மேலும் இசக்கிமுத்துவின் மனைவி வேலை செய்யும் அலுவலகத்துக்கும் சென்று பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இந்தநிலையில் குலசேகரன்பட்டினத்தில் இருந்து கல்லாமொழி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே இசக்கிமுத்து மோட்டார் சைக்கிளில் வந்தபோது அங்கு வந்த சக்திவேல், அவரது மகன் சரண் ஆகியோர் அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து இசக்கிமுத்து அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story