விவசாயியை தாக்கிய வனத்துறை ஊழியர்கள் மீது வழக்கு


விவசாயியை தாக்கிய வனத்துறை ஊழியர்கள் மீது வழக்கு
x

விவசாயியை தாக்கிய வனத்துறை ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி தெருவை சேர்ந்தவர் ராமர் (வயது 23). கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது வயல் நிலத்தில் வேலை செய்ய சென்றபோது அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரக அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்க்கும் பாரதி, ஜெயக்குமார், கடற்கரைவேல் ஆகிய 3 பேர் தாக்கியதாக போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வனத்துறை ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என விவசாயி ராமர் ஸ்ரீவில்லிபுத்தூர் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வள்ளி மணாளன் வனத்துறை ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் வனத்துறை ஊழியர்கள் பாரதி, ஜெயக்குமார், கடற்கரைவேல் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story