இளம் பெண்ணை தாக்கிய கணவர், மாமியார் மீது வழக்கு


இளம் பெண்ணை தாக்கிய கணவர், மாமியார் மீது வழக்கு
x

இளம் பெண்ணை தாக்கிய கணவர், மாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் காந்தி நகரை சேர்ந்தவர் வெயிலம்மாள் (வயது 30). இவரது கணவர் மகேஷ் ராஜா. இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் விருதுநகர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜீவனாம்ச வழக்கு நடந்து வந்தது. இதனைத்தொடர்ந்து மகேஷ் ராஜா போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்த புகார் மனு தொடர்பாக விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதை தொடர்ந்து மகேஷ் ராஜாவும், வெயிலம்மாளும் சேர்ந்து வாழ்ந்தனர். சம்பவத்தன்று மகேஷ்ராஜா வெயிலம்மாளிடம் ஏ.டி.எம். கார்டை கேட்டதில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மகேஷ் ராஜா, வெயிலம்மாளை தாக்கி படுகாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. மகேஷ் ராஜாவின் தாயார் பவுன்தாயும் வெயிலம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெயிலம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் விசாரணை நடத்தி மகேஷ்ராஜா, பவுன் தாய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story