கருணாநிதி குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்டவர் மீது வழக்கு


கருணாநிதி குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்டவர் மீது வழக்கு
x

கருணாநிதி குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர்

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள தோப்பு தெருவைச் சேர்ந்தவர் ராசு(வயது 42). நேற்று முன்தினம் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை தி.மு.க.வினர் உள்ளிட்டோர் கொண்டாடினர். இந்நிலையில் கருணாநிதியின் படத்தை தவறாக சித்தரித்து, அவரது பெயர் மற்றும் புகழை சீர்குலைக்கும் வகையில் முகநூலில் ராசு பதிவிட்டதாக தெரிகிறது. இதையறிந்த அப்பகுதி ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் மணிமாறன், இது குறித்து மீன்சுருட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story