அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வேலூர்
விழுப்புரத்தை சேர்ந்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் பொன்முடி அமைச்சரானதால் வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அமைச்சர் பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர்களின் சார்பில் வக்கீல் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வசந்தலீலா வருகிற 23-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story