நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் அறிவுறுத்தினார்.
ஆய்வு கூட்டம்
தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் போலீசாரின் பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்ற வழக்குகளின் புலன் விசாரணையை விரைந்து மேற்கொள்ள வேண்டும். நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. குற்ற வழக்குகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார்.
சான்றிதழ்
இதைத் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்,சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.