இரு தரப்பினர் மோதல் 39 பேர் மீது வழக்கு


இரு தரப்பினர் மோதல் 39 பேர் மீது வழக்கு
x

திண்டிவனம் அருகே இரு தரப்பினர் மோதல் 39 பேர் மீது வழக்கு

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் அடுத்த ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் சஞ்சய் காந்தி(வயது 38). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் பிரபு என்கிற வெங்கடேசன்(36) என்பவருக்கும் இடையே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இது தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கத்தி, மரக்கட்டை போன்றவற்றால் தாக்கி கொண்டனர். பின்னர் இரு தரப்பினரும் வெள்ளிமேடுபேட்டை போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இதில் சஞ்சய்காந்தி கொடுத்த புகாரின் பேரில் பிரபு என்கிற வெங்கடேசன், விஜயன், குமார், தணிகைராஜ் உள்பட 19 பேர் மீதும், பிரபு மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கமல்தாஸ், சஞ்சய் காந்தி, மணிகண்டன், வீரகண்ணு உள்பட 20 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story