இரு தரப்பினர் மோதல் 10 பேர் மீது வழக்கு


இரு தரப்பினர் மோதல் 10 பேர் மீது வழக்கு
x

மூங்கில்துறைப்பட்டு அருகே இரு தரப்பினர் மோதல் 10 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் மனைவி சூர்யா(வயது 25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமன் மகன் அரசு(25) என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இதன் காரணமாக இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கிக்கொண்டனர். பின்னர் இருவரும் வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இதில் சூர்யா கொடுத்த புகாரின் பேரில் அரசு, பிரகாஷ், மீனா, ரவி, செல்லம்மாள், செல்வி, முத்தம்மாள் ஆகியோர் மீதும், அரசு கொடுத்த புகாரின் பேரில் சூர்யா, அய்யம்மாள், சின்னபொண்ணு மீதும் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story