மது பாட்டில்கள் விற்ற 2 பேர் மீது வழக்குப்பதிவு
மது பாட்டில்கள் விற்ற 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஜோலார்பேட்டை
மது பாட்டில்கள் விற்ற 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்கெ்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது புது ஓட்டல் தெருவில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி விற்பதாக தகவல் கிடைத்தது.
அந்த பகுதியை கண்காணித்த போலீசார் சந்தேகத்தின் பேரில் ஒரு வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் புது ஓட்டல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு என்பவரின் மகன் ரஞ்சித் (வயது 33) என தெரிய வந்தது. இதே போல் சந்தைக்கோடியூர் பகுதியில் முனிசாமி நாயுடு தெரு பகுதியை சேர்ந்த முருகன் (50) என்பவரும் மது விற்றுக்கொண்டிருந்தார். அவரிடமும் 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.
இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.