அ.தி.மு.க.வினர் 200 பேர் மீது வழக்குப்பதிவு


அ.தி.மு.க.வினர் 200 பேர் மீது வழக்குப்பதிவு
x

திட்டச்சேரியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அ.தி.மு.க.வினர் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து திட்டச்சேரி பஸ் நிலையம் பகுதியில் திட்டச்சேரி அ.தி.மு.க. நகர செயலாளர் அப்துல் பாசித் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது . இதை தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகவும் அ.தி.மு.க. நகர செயலாளர் அப்துல் பாசித், அமைப்பு செயலாளர் ஆசைமணி, ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருட்டிணன், பக்கிரிசாமி உள்பட அ.தி.மு.க.வினர் 200 பேர் மீது திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story