கணவர், மாமியார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு


கணவர், மாமியார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
x

பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்த கணவர், மாமியார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி உய்யகொண்டான் திருமலை எம்.எம்.நகரை சேர்ந்தவர் ஸ்ரீபிரணவி (வயது 23). இவருக்கும், மணப்பாறை வடுகப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது 20 பவுன் நகை, வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சம் வரதட்சணையாக ஸ்ரீபிரணவியின் பெற்றோர் கொடுத்துள்ளனர். இந்தநிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு, ஸ்ரீபிரணவியை அவருடைய கணவர் மற்றும் குடும்பத்தினர் துன்புறுத்தியதாக திருச்சி கூடுதல் மகளிர் நீதிமன்றதில் புகார் கொடுத்தார். மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், மணிகண்டன், அவருடைய தாயார் சுமதி, அக்காள் பிரியங்கா மற்றும் உறவினர் யுவராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story