சாலை பணியை தடுத்த 7 பேர் மீது வழக்குப்பதிவு


சாலை பணியை தடுத்த 7 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 7 April 2023 12:15 AM IST (Updated: 7 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே சாலை பணியை தடுத்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையபாளையம் அம்பலக்கார தெரு முதல் தாண்டவன்குளம் கிராமம் வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு புதியதாக இணைப்புசாலை போடும் பணி நடந்து வருகிறது. சாலையின் குறுக்கே ஆற்றுப்பாலம் கட்டும் பணியும் நடக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கொடக்காரமூலை கிராமத்தை சேர்ந்த தமிழன் என்பவர் 6 பேருடன் வந்து சாலை போடும் பணிக்கு ஏன் என் வயலில் இருந்து மண் எடுத்தீர்கள் என்று கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சிமெண்டு மூட்டைகளை ஆற்றில் தூக்கி போட்டும், கான்கிரீட் கலக்கும் எந்திரத்தின் டிரைவர் நெப்போலியன் தாக்கியும், கான்கிரீட் கலவை எந்திரத்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாகவும் இந்தப்பணியின் ஒப்பந்ததாரராக இருந்து வரும் வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் புதுப்பட்டினம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் தமிழன் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story