மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 82 பேர் மீது வழக்குப்பதிவு
ரெயில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 82 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூர்
கும்பகோணம்:
மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கும்பகோணத்தில் ரெயில் மறியல் போராட்டம் நேற்று நடந்தது. இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் உள்பட 65 பேர் மீது கும்பகோணம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதே போல் கும்பகோணம் ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சங்கத்தை சேர்ந்த 17 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story