பாமகவினர் மீது வழக்குப்பதிவு - அன்புமணி ராமதாஸ் கண்டனம்


பாமகவினர் மீது வழக்குப்பதிவு - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
x

பாமகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று போராட்டம் நடைபெற்றது. போராட்டம் தொடர்பாக அன்புமணி உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்ட நிலையில், போராட்டம் வன்முறையாக மாறியது. கைது செய்யப்பட்ட ஒருசில மணி நேரத்தில் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், என்.எல்.சி.க்கு எதிராக போராடிய பாமகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இது கண்டனத்திற்குரியது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காவல்துறையை ஏவி விட்டு அறவழி போராட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்று கூறிய அன்புமணி, விவசாயிகள் விரோத போக்கை அரசு கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், அறுவடைக்கு தயாரான பயிர்களை அழிப்பது நியாயமா? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.


Next Story