அனுமதி பெறாமல் பொதுக்கூட்டம் நடத்தியதாக பா.ஜனதாவினர் மீது வழக்குப்பதிவு


அனுமதி பெறாமல் பொதுக்கூட்டம் நடத்தியதாக பா.ஜனதாவினர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 20 Aug 2022 11:46 PM IST (Updated: 21 Aug 2022 12:14 AM IST)
t-max-icont-min-icon

அனுமதி பெறாமல் பொதுக்கூட்டம் நடத்தியதாக பா.ஜனதாவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் கடந்த 18-ந் தேதி பா.ஜனதா சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் எச்.ராஜா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பொதுக்கூட்டம் உரிய அனுமதி பெறாமலும், அனுமதியின்றி பதாகைகளை வைத்ததாகவும் பா.ஜனதா மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன், நகர தலைவர் காடுவெட்டி குமார் உள்பட பலர் மீது கணேஷ்நகர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story