ஆதீன நிலம் தொடர்பான வழக்கு...மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
ஆதீன மடத்தில் நிர்வாக சீர்திருத்தம் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆர்.எஸ் ராமநாதன், ஏ.செல்வம் ஆகியோரை ஆணையராக நியமித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருநெல்வேலி , தென்காசி , கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள நிலங்களில் வாடகை, குத்தகை வசூல்களை சீரமைக்கவும் , சட்டவிரோத ஆக்கிரமிப்பு மீட்கவும் உத்தரவிடகோரி மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்துள்ளார்.
வாடகை, குத்தகை பணம் நேரடியாக மடத்திற்கு செல்லாமல் ஒரு சிலர் அபகரிப்பதாகவும் , லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு ஆயிரம் ரூபாய்க்கு ரசீது தருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் உள்ளது எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
மேலும் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் நிர்வாக சீர்திருத்தம் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆர்.எஸ் ராமநாதன், ஏ.செல்வம் ஆகியோரை ஆணையராக நியமித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
#BREAKING || ஆதீன நிலம் தொடர்பான வழக்கு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Madurai High Court #MaduraiHighCourt #ThanthiTvhttps://t.co/H2w8h8SZNJ
— Thanthi TV (@ThanthiTV) August 29, 2023