சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 247 வழக்குகளுக்கு தீர்வு


சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 247 வழக்குகளுக்கு தீர்வு
x

தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 247 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.4½ கோடிக்கு இழப்பீடு, தீர்வுத்தொகை பெறப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 247 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.4½ கோடிக்கு இழப்பீடு, தீர்வுத்தொகை பெறப்பட்டது.

சிறப்பு மக்கள் நீதிமன்றம்

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுப்படி தஞ்சை ஒருங்கிணைந்த கோர்ட்டு மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கீழமை கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி தீர்வு காண தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் தஞ்சை ஒருங்கிணைந்த கோர்ட்டிலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து கீழமை கோர்ட்டுகளிலும் நேற்று நடந்தது.இதற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெசிந்தா மார்டின் தலைமை தாங்கினார். தஞ்சை ஒருங்கிணைந்த கோர்ட்டில் போக்சோ சிறப்பு மாவட்ட நீதிபதி சுந்தரராஜன், குற்றவியல் நீதித்துறை நடுவர் இளவரசி, வக்கீல் நேதாஜி ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் சிவில் வழக்குகள், குற்றவியல் வழக்குகள், குடும்ப நல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

247 வழக்குகளுக்கு தீர்வு

மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான சிறப்பு சார்பு நீதிபதி நாகராஜன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுசிலா, வக்கீல் சாரதா ஆகியோர் கொண்ட 2-வது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த 2 அமர்வுகள் மற்றும் கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பாபநாசம், திருவையாறு ஆகிய இடங்களில் உள்ள கீழமை கோர்ட்டுகளில் மொத்தம் 2,479 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 247 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.4 கோடியே 66 லட்சத்து 10 ஆயிரத்து 485 இழப்பீடு மற்றும் தீர்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்று தரப்பட்டது.இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான இந்திராகாந்தி, மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் அமர்சிங், செயலாளர் சசிகுமார் மற்றும் வக்கீல்கள், கோர்ட்டு பணியாளர்கள், வழக்காடிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.


Next Story