ஆண்டிப்பட்டி பகுதியில் கொட்டை முந்திரி விளைச்சல் அமோகம்


ஆண்டிப்பட்டி பகுதியில் கொட்டை முந்திரி விளைச்சல் அமோகம்
x
தினத்தந்தி 26 April 2023 2:30 AM IST (Updated: 26 April 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி பகுதியில் கொட்டை முந்திரி அமோக விளைச்சல் அடைந்துள்ளது.

தேனி

ஆண்டிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கணேசபுரம், ஜி.உசிலம்பட்டி, சித்தார்பட்டி, ஆசாரிபட்டி, ரோசனப்பட்டி, ராமலிங்காபுரம், கண்டமனூர், கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கொட்டை முந்திரி சாகுபடி செய்துள்ளனர். வறட்சியை தாங்கி வளரும் கொட்டை முந்திரிகள் சில ஆண்டுகளிலேயே நல்ல பலன் தரும் என்பதால் இப்பகுதி விவசாயிகள் ஆர்வமுடன் அதனை சாகுபடி செய்து வருகின்றனர்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கைக்கொடுத்த வடகிழக்கு பருவமழையால் ஆண்டிப்பட்டி பகுதியில் கொட்டை முந்திரி மரங்கள் தற்போது அமோக விளைச்சல் கண்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு கொட்டை முந்திரிக்கு போதுமான விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர். மேலும் இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் உரிய விலை நிர்ணயம் செய்து அரசே கொட்டை முந்திரியை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story