கூட்டுறவு வங்கி காசாளர் தூக்குப்போட்டு தற்கொலை


கூட்டுறவு வங்கி காசாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x
திருப்பூர்


ஈரோடு ஜீவாநகரைச் சேர்ந்த செங்கோட்டுவேலு என்பவரது மகன் அன்புக்கரசு (வயது27). இவர் தாராபுரம் நகர கூட்டுறவு வங்கியில் கடந்த 8 மாதங்களாக காசாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து தாராபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகில் வீடு எடுத்து தங்கியிருந்து வங்கிக்கு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டின் படுக்கையறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அன்புக்கரசு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story