மாணவரிடம் சாதி ரீதியாக பேசிய ஆடியோ வைரல்: அரசு பள்ளி ஆசிரியைகள் 2 பேர் பணியிடை நீக்கம்
மாணவரிடம் சாதி ரீதியாக பேசிய ஆடியோ வைரல்: அரசு பள்ளி ஆசிரியைகள் 2 பேர் பணியிடை நீக்கம்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்தல் தொடர்பாக, பள்ளியின் கணினி ஆசிரியை மீனா உதவியுடன், உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி செல்போனில் மாணவர் ஒருவரிடம் சாதி ரீதியாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் உத்தரவின்பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, கணினி ஆசிரியை மீனா ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story